×

ஆன்லைன் கடன் ஆப் டார்ச்சரால் விபரீத முடிவு அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை:மகள் கண் முன் தெலங்கானாவில் பயங்கரம்

திருமலை: தெலங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதாஇந்திரா. இவரது பாதுகாப்பு அதிகாரி பைசல்அலி(52). இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கினாராம். மேலும், செல்போனில் ஆன்லைன் ஆப் மூலம் பல லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் இவரை வீடு தேடி சென்றும், அடிக்கடி போன் செய்தும் பணத்தை திருப்பி செலுத்தும்படி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், பைசல்அலி கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் அமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக சீருடையில் பைசல்அலி சென்றார். பணிக்கு சென்ற சிறிது நேரத்தில் இவரை தேடி கொண்டு கடன் கொடுத்த நிறுவனத்தினர் இவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். நிதி நிறுவனத்தினர் வந்தது குறித்து தெரிவிக்க அவரது மகள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றார். ஆனால், அதற்குள் பைசல்அலி, அமைச்சரின் வீட்டருகே உள்ள டீ கடைக்கு சென்றார். அவரை தேடி அவரது மகள் டீக்கடைக்கு வந்துள்ளார். அங்கு தனது தந்தையிடம் கடன்காரர்கள் காலையிலேயே வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.

இதனால், கடும் மன உளைச்சல் அடைந்த பைசல்அலி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது மகள் மற்றும் பொதுமக்கள் கண்முன் தனது தலையில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவரது மகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி சத்தம் கேட்டு நாலாப்புறமும் சிதறி ஓடினர்.இதுகுறித்து தகவலறிந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். இதேபோல் தகவலறிந்த அமைச்சர் சபிதாஇந்திராவும் சம்பவ இடத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும், அவரது மகளுக்கு ஆறுதல் கூறினார்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆன்லைன் கடன் ஆப் டார்ச்சரால் விபரீத முடிவு அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை:மகள் கண் முன் தெலங்கானாவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Telangana ,Tirumala ,State ,Education Minister ,Sabitha Indira ,Faisal Ali ,
× RELATED இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில்...